Wednesday, August 31, 2011

அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !)

 டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.

அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள்.  அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் IT ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன வாழ்க்கைடா இது என்கிறார்கள்.



எதுக்கு இவ்வளவு கஷ்டம் ?!

இத்தனைக்கும்  நாம் பதிவெழுதும் இந்த தளம் ஒரு அமெரிக்க கம்பெனி தானே நமக்கு கொடுத்தது ?! ஒரு நன்றிக் கடனாக , அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு  சொல்வது நம் கடமை இல்லையா ?

 இதோ, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்கு கடன் பிரச்சினை இருந்தாலும் , அதற்கு ஓர் அருமருந்து ! 



நன்றி புகைப்பட உதவி :
http://www.financialfacts.org/wading-through-the-recession-tips-and-advice/
http://allkavach.com/products-shri-dhan-laxmi-yantra-23.aspx

ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் !


 அமெரிக்க பதிவர்கள் யாராவது வாங்கி, வெள்ளை மாளிகையில் கொடுங்களேன் !

உடனே சமஸ்தானத்திற்கு போன் செய்யவும் !



5 comments:

  1. இந்த பிஸ்னஸ் வேற ஆரம்பிச்சாச்சா?வெளங்கிடும்!

    ReplyDelete
  2. நல்ல யோசனை. அப்படியே, அமெரிக்காவோட பெயரில் கடைசியாக இன்னொரு a சேர்த்துப் பார்க்கலாம், அல்லது ராசிக்கல் எதையாச்சும் வாங்கி வெள்ளை மாளிகையில் கட்டித் தொங்க விடலாம், வெள்ளை மாளிகையை வாஸ்து பிரச்சினை ஏதாவது இருக்கான்னு பார்த்து இடிச்சி கட்டலாம், நல்ல நேரம் பார்த்து பட்ஜெட் போடச் சொல்லலாம், ஒபாமா காரில் மந்திரிச்ச எலுமிச்சம் பழத்தைக் கட்டித் தொங்க விடலாம் ... இத்தனை யோசனையையும் வழங்கி எல்லோரையும் பணக்காரனாக்கும் வழி தெரிந்த இந்தியாக்காரன் ஊரைச் சுத்தி கையேந்துபவனாகவே இருப்பது தான் அதிசயம்.

    ReplyDelete
  3. @Yoga.s.FR...
    இது பிசினஸ் இல்லீங்க,
    ஏதோ நம்மளால் முடிந்த பகுத்தறிவு பரப்புரை !
    வ - த - ந - மீ - வ!!!

    @Jayadev Das...
    உங்க கோவம் புரியுது நண்பரே !
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete
  4. நல்லா சொல்றிங்க பாஸ் யோசன.. நான் சொல்ல போறத யாருகிட்டயும் சொல்லிடாதிங்கோ.. ஒபாமாவின் நிதி ஆலோசகர் பதவிக்கு ஆள் தேடுராங்கலாம்...

    ReplyDelete
  5. @குடிமகன்...
    ஆமாங்க... நான் போன வாரம்தான் அந்த பதவியை ராஜினாமா செஞ்சேன்...
    அதான் வேற ஆள் தேடுறாங்க போல... ஹி...ஹி...
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...