Saturday, September 26, 2009

எத்தனை நாளாச்சு...?




எத்தனை
நாளைக்குத்தான் தியரி மட்டும் எழுதுறது...?
சும்மா ஒரு தடவ, போயம் - உம் ட்ரை பண்ணலாம் என்ற நப்பாசையில் இந்த பதிவு.
அதாங்க - கவிதை எழுதி பாக்கலாமுன்னு... (என்ன கொடும சரவணன் இது..?)

முன் குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் இந்த கவிதையை படிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


எத்தனை நாளாச்சு ..? (தலைப்பாமாம்.!)
-----------------------------------------------

எத்தனை நாளாச்சு...?
சைக்கிள் ஓட்டி..

எத்தனை நாளாச்சு ...?
மாலை மழையில் நனைந்து...

எத்தனை நாளாச்சு ...?
வானவில் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
அண்ணாந்து விமானம் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வீட்டில் லாந்தர் ஏத்தி...

எத்தனை நாளாச்சு...?
ஒலியும் ஒளியும் பார்த்து...

எத்தனை நாளாச்சு...?
வானொலி செய்தி கேட்டு...

எத்தனை நாளாச்சு...?
சென்னைக்கு வந்து...

(இன்னும் என்ன எதிர் பார்க்கறீங்க..? அவ்ளோதான்,கவிதை முடிஞ்சது !
ஒரு ஊர்ல ஒரு நரி , இதோட கவிதை சரி. )

பின் குறிப்பு: பின் குறிப்பு வரை படித்த தைரிய சாலிகளுக்கு ஒரு சவால்.முடிந்தால் இன்னொரு தடவை இந்த கவிதையை(!) படிக்கவும்.

Wednesday, September 16, 2009

கலைஞர்-க்கு அண்ணா விருது





கடந்த சனிக் கிழமையன்று நானும் என் நண்பனும் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம் . முதலமைச்சர் கலைஞர், அண்ணா விருது பெற்றதை அடுத்து அதற்கு காரணம் என்ன என்று ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள்.

கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் என்று தென்னவனும்,
ஏழைகளுக்கு உதவுவதால் என்று அமைச்சர் பொன்முடியும்,
பேச்சாற்றலால் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும்,
எழுத்தாற்றலால் என்று கவிபேரரசு வைரமுத்துவும்,
பகுத்தறிவுதான் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,
இன்னுமோர் தலைப்பில் சுப.வீரபாண்டியனும் பேசினார்கள்.


கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு கவிஞர் வாலி நடுவராக இருந்தார்.
இந்த வயதிலும் வாலியின் கவிதை வரிகள் வசீகரிக்கவே செய்கின்றன.

அவர் சொன்ன கவிதையில் இருந்து சில வரிகள்.

...
கலைஞர் -க்கு அண்ணா விருது.
அண்ணாவுக்கு..? கலைஞரே விருது !

வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுப்பதால் இது கொடை நாடு.
கொட நாடு ? (சில நொடிகள் மௌனம்....)
கொட நாடு .... அது கொடா நாடு !
......



எல்லாம் சரி ....
கருத்தரங்கத்தின் ஆறு தலைப்புகளோடு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கலாம்
என்றெனக்கு தோன்றியது.

விருது கொடுப்பது தி . மு . க என்பதால்,
தி . மு . க விற்கு தலைவர் கலைஞர் என்பதால்...


Friday, September 11, 2009

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்.



இன்று தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
ஏன் ?சொன்னால் நம்ப மாட்டீர்கள்

(அப்புறம் எதுக்கு சொல்றன்னு கேக்கறீங்களா . வேற என்ன பண்றது. ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சி . எதையாச்சி எழுத வேணாமா? .ஒரு போஸ்ட்க்கு டாபிக் கெடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பாத்தாதான் தெரியும் !)

இன்றுதான் அரசி (செல்வியின் இரண்டாம் பாகம்) மெகாத் தொடர் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக சுபம் போட்டார்கள் (இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சுபம்).வரும் திங்கட் கிழமை முதல் அடுத்த அபத்தம் ஆரம்பம். செல்லமே என்ற புதிய மெகாத் தொடர் போடப் போகிறார்கள்.

அதிலும் ராதிகா வுக்கு தொல்லை கொடுப்பதேற்கே யாராவது வில்லன்களும், பாழாய்ப்போன விதியும் வரும். அதையெல்லாம் பல வருடங்களில் எப்படி தாண்டி வருகிறார் என்பதுதான் கதையாக (!) இருக்கும்.

அதெப்படி இவ்ளோ கரெக்டா சொல்றேன்னு பாக்கறீங்களா?
சற்றேறக்குறைய எல்ல தமிழ் மெகாத் தொடர்களிலும் இதுதான் கதையாகக் கொள்ளப் படுகிறது.இப்போது இந்த மாதிரியான தொடர்களிலும் சண்டை,பாட்டு எல்லாம் போடுகிறார்கள்.

இந்த வகையில் விஜய் டிவியும் மக்கள் டிவி, சாரி மக்கள் தொலைக்காட்சியும் கொஞ்சம் பரவாயில்லை.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...