Friday, July 31, 2009

முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).





இந்த ப்ளாக்- க்கு தேசாந்திரி என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது என்னுடைய பத்து வருடக்கனவு ஒன்றும் இல்லை.

இந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் மூன்று புத்தகங்களை வாங்கினேன்.துணை எழுத்து , தேசாந்திரி, கதா விலாசம்.

நான் முதலில் ராமகிருஷ்ணனின் துணை எழுத்தை, விகடனில் தொடர் கதையாக வரும்போது தான் படித்தேன்.சில வாரங்களில் படிக்க முடியாத வருத்தம் எனக்கு இருந்தது.எனக்கு தெரிந்து தின மலர் சிறுவர் மலர் கதைகளுக்கு அடுத்த படியாக ஆசையுடன் படித்தது ராம கிருஷ்ணனின் எழுத்துக்கள் தான்.

அவருடைய அத்தனை எதுத்துக்களும் என்னைப் பொறுத்த வரை "துணை எழுத்து" க்கள் தான்.நாம் நமது பால்யதிற்குள் செல்லும் போது துணைக்கு வருகின்றன அவரின் எழுத்துக்கள்.நான் பால்யத்தில் நினைத்தவைகளை அந்த வயதின் வாசனை மாறாமல் வார்த்திருக்கிறார்.என்றாவது முடிந்தால் அவருடன் ஒரு அரை மணி நேரம் பேச வேண்டும் போலிருக்கிறது.எனக்கு தேசாந்தரி என்ற வார்த்தையை அறிமுகம் செய்ததும் எஸ்.ரா தான்.தேங்க்ஸ் ராம கிருஷ்ணன்.

துணை எழுத்தும் , கதா விலாசமும் படித்து விட்டேன். தேசாந்திரி பாதி தான் படித்திருக்கிறேன்.இன்னமும் "கேள்விக்குறி" வாங்க வில்லை.
அடுத்த வருட புத்தகத் திருவிழாவிற்கு சென்றால் வாங்க வேண்டும்.
அதற்குள் "சிறிது வெளிச்சம்" மும் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.

இவை மட்டும் அல்லாமல் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.நான் விகடன் வாசகன் என்பதால் அதில் தொடராக வந்தவைகளை மட்டும் தான் படித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும்.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...